நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 9 பேர் சாவு


நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 9 பேர் சாவு
x
தினத்தந்தி 3 Jun 2021 6:59 AM IST (Updated: 3 Jun 2021 7:00 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 9 ேபர் பலியாகி உள்ளனர்.

நாமக்கல்,


நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவுக்கு 262 பேர் பலியாகி இருந்தனர். இந்த நிலையில் நேற்று கொரோனாவுக்கு அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்த மங்களபுரம், ராசிபுரம், பச்சாம்பாளையம், பள்ளிபாளையம், குமாரபாளையம், குமரிபாளையம், நாமகிரிப்பேட்டை, பரமத்திவேலூர், மோகனூர் பகுதியை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 9 பேர் பலியாகினர்.

இதனால் நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியான நபர்களின் எண்ணிக்கை 271 ஆக அதிகரித்து உள்ளது. 
சோகம்

ஒரே நாளில் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

Next Story