வீட்டிற்குள் புகுந்த பாம்பு
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் வீட்டிற்குள் புகுந்த பாம்பை பிடித்தனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் கோதை நகர் பகுதியில் வீட்டு குடிநீர் தொட்டிக்குள் நல்ல பாம்பு ஒன்று பதுங்கி இருந்தது. வீட்டில் இருந்தவர்கள் தண்ணீர் பிடிக்க சென்ற போது குடிநீர் தொட்டிக்குள் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து ஸ்ரீவில்லிபுத்தூர் தீயணைப்புத்துறை அதிகாரி குருசாமிக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று குடிநீர் தொட்டிக்குள் பதுங்கி இருந்த நல்ல பாம்பை உயிருடன் பிடித்தனர். பின்னர் அந்த பாம்பை ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வனப்பகுதியில் உயிருடன் கொண்டு விட்டனர்.
Related Tags :
Next Story