வெப்ப சலனம் காரணமாக புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்


வெப்ப சலனம் காரணமாக புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
x
தினத்தந்தி 8 Jun 2021 7:00 PM IST (Updated: 8 Jun 2021 7:00 PM IST)
t-max-icont-min-icon

வெப்ப சலனம் காரணமாக புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் இயக்குனர் நா.புவியரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-

வெப்பச்சலனம்
வெப்பச்சலனம் காரணமாக 8-ந் தேதி (இன்று) மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், 9-ந் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும். 10-ந் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்கள் மற்றும் 
புதுச்சேரியில் லேசான மழையும், 11-ந் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கன மழையும், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும். சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்துக்கு (இன்றும், நாளையும்) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை
இன்று முதல் 11-ந் தேதி வரை மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். 9-ந் தேதி (நாளை), 10-ந் தேதி (நாளை மறுதினம்) மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். 11-ந் தேதி மத்திய வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கி.மீ. 
வேகத்தில் வீசக்கூடும். 10-ந் தேதி, 11-ந் தேதிகளில் கேரளா, கர்நாடக கடலோர பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். 11-ந் தேதி வரை தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே மீனவர்கள் இந்த தேதிகளில், அந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என 
அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story