மாவட்ட செய்திகள்

கோவில்பட்டியில் பலத்த மழை + "||" + rain in Kovilpatti

கோவில்பட்டியில் பலத்த மழை

கோவில்பட்டியில் பலத்த மழை
கோவில்பட்டியில் பலத்த மழை பெய்தது.
கோவில்பட்டி:

கோவில்பட்டி பகுதியில் நேற்று காலையில் வழக்கம் போல் வெயில் அதிகமாக இருந்தது. மாலை 3 மணிக்கு மேல் பலத்த காற்றுடன் வானில் கருமேகங்கள் திரண்டன.

4 மணிக்கு லேசாக தொடங்கிய மழை, தொடர்ந்து இடி, மின்னலுடன் பலத்த மழையாக பெய்தது. சுமார் 1 மணி நேரம் இந்த மழை நீடித்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தனிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கோவில்பட்டி, ஆறுமுகநேரியில் இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
சட்டசபையில் கவர்னர் உரையில் ஜெய்ஹிந்த் வார்த்தையை நீக்கியதால் தமிழகம் தலை நிமிர்ந்தது என்று பேசிய ஈஸ்வரன் எம்.எல்.ஏ.வை கண்டித்தும், அந்த பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்க கோரி கோவில்பட்டி தேவர் சிலை முன்பு நேற்று மாலையில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.