மாவட்ட செய்திகள்

நடைபயிற்சியின் போது பஸ் மோதி தி.மு.க. பிரமுகர் பலி + "||" + The bus collided with the DMK while walking. The celebrity kills

நடைபயிற்சியின் போது பஸ் மோதி தி.மு.க. பிரமுகர் பலி

நடைபயிற்சியின் போது பஸ் மோதி தி.மு.க. பிரமுகர் பலி
நடைபயிற்சி சென்ற போது பஸ் மோதிய விபத்தில் தி.மு.க. பிரமுகர் பரிதாபமாக இறந்தார்.
தாம்பரம்,

காஞ்சீபுரம் வழக்கறுத்தீஸ்வரர் கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 51). தி.மு.க. பிரமுகரான இவர் முன்னாள் நகர மன்ற உறுப்பினராவார். தற்போது காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட வரத்தக அணி துணை அமைப்பாளராக இருந்தார். நேற்று இவர் தனது வீட்டில் இருந்து சின்ன காஞ்சீபுரம் டி.கே. நம்பி தெரு வழியாக நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார்.அப்போது காஞ்சீபுரத்தில் இருந்து வாலாஜாபாத் நோக்கி வேகமாக சென்ற தனியார் பஸ் கண்ணிமைக்கும் நேரத்தில் இவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த பார்த்திபனை அங்கு இருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.


சாவு

அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சின்ன காஞ்சீபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

உயிரிழந்த பார்த்திபனுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு தான் பார்த்திபனின் மனைவி கொரோனா தொற்றால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. கும்மிடிப்பூண்டி அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலி
கும்மிடிப்பூண்டி அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி விவசாயி பலியானார்.
2. பழுதாகி நின்ற போலீஸ் வாகனத்தின் மீது மொபட் மோதி பெண் உடற்பயிற்சியாளர் பலி
பழுதாகி நின்ற போலீஸ் வாகனத்தின் மீது மொபட் மோதி பெண் உடற்பயிற்சியாளர் பலியானார்.
3. பொன்னேரி அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலி
பொன்னேரி அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
4. தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதல் வங்கி பெண் அதிகாரி பலி நண்பர் படுகாயம்
கானத்தூர் அருகே சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவரில் மோட்டார்சைக்கிள் மோதிய விபத்தில் வங்கி பெண் அதிகாரி பரிதாபமாக இறந்தார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார்.
5. அறுந்து கிடந்த மின்கம்பியை தொட்டதால் பரிதாபம்: மின்சாரம் தாக்கி நெசவு தொழிலாளி பலி
ஆர்.கே.பேட்டை அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை தொட்டதால் மின்சாரம் தாக்கி நெசவு தொழிலாளி சுருண்டு விழுந்து பலியானார்.