மாவட்ட செய்திகள்

கொரோனா நிவாரண உதவி பொருட்கள் + "||" + corona

கொரோனா நிவாரண உதவி பொருட்கள்

கொரோனா நிவாரண உதவி பொருட்கள்
கொரோனா நிவாரண உதவி பொருட்கள் வழங்கப்பட்டன.
கீழக்கரை, 
கொரோனா தொற்று காரணமாக தமிழக அரசு தளர்வுகளுடன் ஊரடங்கு பிறப்பித்துள்ளது. இதனால் சிலர் தொழிலுக்கு செல்ல முடியாமல் சிரமம் அடைந்து வருகின்றனர். 
இதனால் வேலைக்கு செல்ல முடியாத மக்களின் நலனை கருத்தில் கொண்டு கீழக்கரை வடக்குத் தெரு ஜமாத், பொதுமக்கள் சார்பில் 500-க்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய், மைதா, கோதுமை, சீனி போன்ற அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்யப்பட்டது. 
இந் நிகழ்ச்சியை வடக்குத்தெரு ஜமாத் தலைவர் ரத்தின முகம்மது தொடங்கி வைத்தார். 
ஏற்பாடுகளை ஆபித் அலி, ஹாஜா முகைதீன், பசீர் அகமது, அசன் நியாஸ்தீன், தம்பி பாப்பா, பாசித், இர்பான், மீரான் அலி, ரகமத் அலி, இம்பாலா சாகுல் ஹமீது, அய்யூப்கான் உள்பட வடக்குத்தெரு ஜமாத்தார்கள் செய்திருந்தனர்.