குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை


குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 9 Jun 2021 11:38 PM IST (Updated: 9 Jun 2021 11:38 PM IST)
t-max-icont-min-icon

குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நொய்யல்
நொய்யல் அருகே உள்ள குந்தாணிபாளையம் நத்தமேட்டில் இருந்து புதுக்கோடை செல்லும் தார் சாலை போடப்பட்டு பல ஆண்டுகள் ஆனாதால் ஆங்காங்கே குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதி அடைந்து வருகின்றனர். சில நேரங்களில் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கீழே விழுந்து காயமும் ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட உள்ளத்துறை அதிகாரிகள் உடனடியாக குண்டும், குழியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என குந்தாணிபாளையம் நத்தமேடு, வேட்டமங்கலம் மற்றும் குளத்துப்பாளையம் பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story