நெல்லையில் திராவிடர் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் திராவிடர் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
நெல்லை, ஜூன்:
திராவிடர் தமிழர் கட்சியினர் நெல்லை கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் திருக்குமரன் தலைமை தாங்கி, ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் பகுதியில் தூய்மை பணியாளர்கள் குப்பை அள்ளும் வாகனத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி இறந்த பணியாளரின் குடும்பத்திற்கு அரசு பணி வழங்க வேண்டும். நிதி உதவி வழங்க வேண்டும். அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related Tags :
Next Story