மாவட்ட செய்திகள்

காயல்பட்டினத்தில் சூதாடிய 3 பேர் கைது + "||" + 3 arrested for gambling in kayalpattinam

காயல்பட்டினத்தில் சூதாடிய 3 பேர் கைது

காயல்பட்டினத்தில் சூதாடிய 3 பேர் கைது
காயல்பட்டினத்தில் பணம் வைத்து சூதாடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஆறுமுகநேரி:
ஆறுமுகநேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் நாராயணன் மற்றும் போலீஸ் படையினர் காயல்பட்டணத்தில் ரோந்து சென்றனர். அப்போது காயல்பட்டினம் சித்தன்தெருவில் அஸ்ரப் என்பவருடைய வீட்டில் வைத்து காசு வைத்து சூதாடிய 3 பேர் பிடிபட்டனர். விசாரணையில், அவர்கள் காயல்பட்டினம் நைனார் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி அகமது முகைதீன் அஷ்ரப் (வயது 55), காயல்பட்டினம் காயிதே மில்லத் நகரைச் சேர்ந்த முகமது ஒமர் மகன் முகைதீன் அப்துல் காதர் (46), காயல்பட்டினம் மருத்துவர் தெருவை சேர்ந்த அப்துல் கபூர் மகன் உமர் லெப்பை (60) என தெரிய வந்தது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து  சீட்டுக்கட்டு, ரூ.12 ஆயிரத்து 230 கைப்பற்றப்பட்டது.