கடலூர் புதிய கோட்டாட்சியராக அதியமான் கவியரசு பொறுப்பேற்பு


கடலூர்  புதிய கோட்டாட்சியராக அதியமான் கவியரசு பொறுப்பேற்பு
x
தினத்தந்தி 10 Jun 2021 11:11 PM IST (Updated: 10 Jun 2021 11:11 PM IST)
t-max-icont-min-icon

பொறுப்பேற்பு

கடலூர், 
கடலூர் வருவாய் கோட்டாட்சியராக பணியாற்றி வந்த ஜெகதீஸ்வரன் சென்னை மின்ஆளுகை மேலாண்மை அலுவலராக பணியிடம் மாற்றப்பட்டார். இதையடுத்து கடலூர் புதிய வருவாய் கோட்டாட்சியராக அதியமான் கவியரசு நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்.
இவர் சேலம் துணை கலெக்டராக பயிற்சி பெற்று தற்போது கடலூர் கோட்டாட்சியராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவரிடம் ஜெகதீஸ்வரன் பொறுப்புகளை ஒப்படைத்து வாழ்த்து தெரிவித்தார். இதேபோல் கோட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள், வருவாய்த்துறையினர் புதிதாக பொறுப்பேற்ற கோட்டாட்சியர் அதியமான் கவியரசுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

Next Story