மாவட்ட செய்திகள்

இரிடியம் மோசடி வழக்கில்மேலும் 2 பேர் கைது + "||" + arrest

இரிடியம் மோசடி வழக்கில்மேலும் 2 பேர் கைது

இரிடியம் மோசடி வழக்கில்மேலும் 2 பேர் கைது
இரியடிம் மோசடி வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரிடியம் மோசடி வழக்கில்
மேலும் 2 பேர் கைது
ராயக்கோட்டை, ஜூன்.11-
இரியடிம் மோசடி வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இரிடியம் தருவதாக மோசடி
ராயக்கோட்டை அண்ணாநகரை சேர்ந்த அன்பரசு (வயது 26) என்பவரை தொடர்பு கொண்ட ஒரு கும்பல் ரூ.50 ஆயிரம் கொடுத்தால் இரிடியம் தருவதாகவும், அதனை வீட்டில் வைத்து வழிபட்டால் செல்வம் கொழிக்கும் என்றும் கூறியதாக தெரிகிறது.
இதனை நம்பிய அன்பரசு அந்த கும்பலிடம் முதல் தவணையாக ரூ.10 ஆயிரம் கொடுத்தார். அந்த கும்பல் இரிடியம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டது. இதுகுறித்த புகாரின் பேரில் ராயக்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
ேமலும் 2 பேர் கைது
விசாரணையில் ஓசூரை சேர்ந்த மஞ்சுநாத் (40), தர்மபுரி மாவட்டம் பாலக்கோட்டை அடுத்த கரகூரை சேர்ந்த பொக்லைன் டிரைவர் ராஜா (32), சேலம் மாவட்டம், முத்துநாயக்கனப்பட்டியை சேர்ந்த சரவணகுமார் (30) ஆகியோர் அன்பரசுவை ஏமாற்றியது தெரிந்தது.
ராஜாவை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இரு பாஸ்பரஸ் இரிடியம், மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.  இந்த நிலையில் தலைமறைவாக இருந்த சரவணகுமார் (30), மஞ்சுநாத் (40) ஆகிய இருவரையும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்ட்டர் சிவராஜ் கைது செய்து அவரிடம் இருந்த ஒரு இரிடியத்தை பறிமுதல் செய்தனர்.