தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்


தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்
x
தினத்தந்தி 10 Jun 2021 8:29 PM GMT (Updated: 10 Jun 2021 8:29 PM GMT)

ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தடுப்பூசிகள் இருப்பு இல்லாததால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

ஜெயங்கொண்டம்:

தடுப்பூசி போடப்படவில்லை
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் தினமும் கொரோனா தடுப்பூசி போட நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். அதில் குறிப்பிட்ட பேருக்கு மட்டும் தடுப்பூசி போடப்பட்டு வந்தது.
  இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக தடுப்பூசி இல்லாததால் யாருக்கும் போடப்படவில்லை. வாசலில் தடுப்பூசிகள் இருப்பு இல்லை என்று எந்த அறிவிப்பும் வைக்கப்படவில்லை.
ஏமாற்றம்
  இதனால் தடுப்பூசி போடுவதற்கு கடந்த 3 நாட்களாக தொடர்ந்து ஏராளமானோர் ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதியில் இருந்து அரசு மருத்துவமனைக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர். இது குறித்து மருத்துவமனையில் விசாரித்தபோது மாலைக்குள் வந்து விடும் என்றும், இன்று(வெள்ளிக்கிழமை) முதல் தடுப்பூசிகள் போடப்படும் என்றும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
  கொரோனாவால் பலர் பாதிக்கப்படும் சூழலில், தினமும் தடுப்பூசி போடுவதற்கு போர்க்கால அடிப்படையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வலியுறுத்தியுள்ளனர்.

Next Story