தவறி விழுந்த பொம்மையை எடுக்க நினைத்து கிணற்றில் விழுந்த குழந்தை சாவு


தவறி விழுந்த பொம்மையை எடுக்க நினைத்து கிணற்றில் விழுந்த குழந்தை சாவு
x
தினத்தந்தி 11 Jun 2021 2:13 AM IST (Updated: 11 Jun 2021 2:13 AM IST)
t-max-icont-min-icon

சாத்தூர் அருகே தவறி விழுந்த பொம்மையை எடுக்க நினைத்து கிணற்றில் விழுந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள்.

தாயில்பட்டி,
சாத்தூர் அருகே தவறி விழுந்த பொம்மையை எடுக்க நினைத்து கிணற்றில் விழுந்த சிறுமி பரிதாபமாக உயிரிழந்தாள். 
பொம்மை 
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள ஏழாயிரம்பண்ணையை சேர்ந்தவர் ரமேஷ். இவருடைய மனைவி கல்பனா. இவர்களுடைய 2-வது குழந்தை   பொன்திரேஷா (வயது 3). 
இவர்கள் வீட்டின் அருகே கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் கல்பனா தண்ணீர் எடுக்க செல்வது வழக்கம். 
நேற்று தனது மகள் பொன்திரேஷாவுடன் கிணற்றில் தண்ணீர் எடுக்க சென்று இருந்தார். அப்போது குழந்தை கையில் ஒரு பொம்மைைய வைத்திருந்தது. 
குழந்தையை காணவில்லை 
பின்னர் தண்ணீர் எடுத்து விட்டு அவசரமாக கல்பனா மட்டும் வீட்டிற்கு வந்து விட்டார். சற்று ேநரம் கழித்து குழந்தையை தேடினார். அப்போது குழந்தை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். 
இதையடுத்து அவர் பல இடங்களில் குழந்தையை தேடி பார்த்தார். அப்போது கிணற்றில் பொம்ைம மிதந்து கொண்டு இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம்பக்கத்தில் உள்ளவர்களிடம் கூறினார். 
சடலமாக மீட்பு 
பின்னர் இதுகுறித்து ஏழாயிரம் பண்ணை போலீசாருக்கும், வெம்பக்கோட்டை தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. 
தீயணைப்பு நிலைய அலுவலர் காந்தையா தலைமையில் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடினர். பின்னர் குழந்தையை பிணமாக மீட்டனர். 
இந்த சம்பவம் குறித்து ஏழாயிரம்பண்ணை இன்ஸ்பெக்டர் பாலாஜி, சப்-இன்ஸ்பெக்டர் ராமசாமி ஆகியோர் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல் கட்ட விசாரணையில் குழந்தை கையில் இருந்த பொம்மை எப்படியோ கிணற்றில் விழுந்து உள்ளது, அந்த பொம்மையை எடுக்க நிைனத்து குழந்தை கிணற்றில் தவறி விழுந்து இறந்து இருக்கலாம் என்பது தெரியவந்தது. 
கிணற்றில் விழுந்து 3 வயது குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Related Tags :
Next Story