ஜீயபுரம் அருகே அ.தி.மு.க. கல்வெட்டு உடைப்பு; மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
ஜீயபுரம் பகுதியில் அ.தி.மு.க. கல்வெட்டை உடைத்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
ஜீயபுரம்,
ஜீயபுரம் பகுதியில் அ.தி.மு.க. கல்வெட்டை உடைத்த மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
அ.தி.மு.க. கல்வெட்டு உடைப்பு
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்டது பெட்டவாய்த்தலை. இங்குள்ள பழங்காவேரி பகுதியில் கடந்த 2011-ம் ஆண்டு அப்போதைய அ.தி.மு.க. கொறடா மனோகரன் தலைமையில் அந்த பகுதியில் கட்சி கொடி ஏற்றப்பட்டு, அதற்கான கல்வெட்டும் வைக்கப்பட்டது.
இந்தநிலையில் அந்த கல்வெட்டு நேற்று காலை உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப்பாா்த்து அ.தி.மு.க.வினர் அதிர்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
போலீசில் புகார்
இந்த சம்பவம் குறித்து அந்தநல்லூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் அழகேசன் பெட்டவாய்த்தலை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் அந்த கல்வெட்டை உடைத்து சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மர்ம நபர்களை வலைவீசி தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
Related Tags :
Next Story