மாவட்ட செய்திகள்

மோகனூர், ராசிபுரம் பகுதியில்மோட்டார்சைக்கிளில் சாராயம் கடத்தியவர் கைது ஒருவருக்கு வலைவீச்சு + "||" + one arrested

மோகனூர், ராசிபுரம் பகுதியில்மோட்டார்சைக்கிளில் சாராயம் கடத்தியவர் கைது ஒருவருக்கு வலைவீச்சு

மோகனூர், ராசிபுரம் பகுதியில்மோட்டார்சைக்கிளில் சாராயம் கடத்தியவர் கைது ஒருவருக்கு வலைவீச்சு
மோகனூர், ராசிபுரம் பகுதியில் மோட்டார்சைக்கிளில் சாராயம் கடத்தியவர் கைது ஒருவருக்கு வலைவீச்சு
மோகனூர்:
மோகனூர் அருகே காட்டுப்புத்தூர் சாலையில் சங்கரம்பாளையம் பிரிவு ரோடு அருகே நேற்று மோகனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஓவியா தலைமையில் போலீசார் லோகநாதன், சதீஸ்குமார் ஆகியோர் மதுவிலக்கு குறித்து வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை சந்தேகத்தின்பேரில் நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது மோட்டார்சைக்கிள் டேங்க்கவரில் 5 லிட்டர் சாராயம் கடத்தி வந்ததை கண்டுபிடித்த போலீசார் அந்த நபரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் திருச்சி மாவட்டம் காட்டுப்புத்தூர் அருகே உன்னியூரை சேர்ந்த பழ வியாபாரி அண்ணாதுரை (வயது 35) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் மோட்டர்சைக்கிள் மற்றும் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
ராசிபுரம் டவுன் சாமுண்டி தியேட்டர் அருகே ராசிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் வாகன தணிக்கை செய்தனர். அப்போது வாலிபர் ஒருவர் வந்த மோட்டார் சைக்கிளை போலீசார் நிறுத்தினர். ஆனால் அந்த வாலிபர் மோட்டார் சைக்கிளை கீழே போட்டுவிட்டு தப்பி சென்று விட்டார். போலீசார் மோட்டார் சைக்கிளை சோதனையிட்டபோது டேங்க் கவரில் ஒரு பாட்டிலில் 2 லிட்டர் சாராயம் வைத்திருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில் மோட்டார் சைக்கிளில் சாராயம் வைத்திருந்தவர் ராசிபுரம் டவுன் வி.நகர் ரோடு எண் 1 பகுதியை சேர்ந்த சரவணன் என்பது தெரியவந்தது. இதையொட்டி சரவணன் மீது சப்- இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சரவணனை வலைவீசி தேடி வருகிறார்.
=======