புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்திய 8 பேர் கைது


புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்திய 8 பேர் கைது
x
தினத்தந்தி 11 Jun 2021 10:39 PM IST (Updated: 11 Jun 2021 10:39 PM IST)
t-max-icont-min-icon

மதுபாட்டில்கள் கடத்திய 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

மயிலம், 

திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் தலைமையிலான போலீசார் மயிலம் அருகே கோரைக்கேணி ஏரிக்கரை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த 2 மோட்டாா் சைக்கிள்களை மறித்து சோதனை செய்தனர். அப்போது அதில் 314 மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் மயிலம் அருகே வெங்கந்தூர் கிராமத்தை சேர்ந்த தங்கவேல் மகன் ஜெகதீசன் (வயது 42), மணி மகன் சசிகுமார் (28), குப்புசாமி மகன் பாபு (39), சின்னப்பையன் மகன் தேவா (29) ஆகியோர் என்பதும், புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து ஜெகதீசன் உள்பட 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். 

இதேபோல் ஐவேலி சோதனை சாவடியில் அந்த வழியாக வந்த மினிவேனை போலீசார் மறித்து சோதனை செய்தனர். அதில் இளநீர் மற்றும் பூசணிக்காய் ஆகியவற்றுக்குள் மதுபாட்டில்கள் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மினிவேனில் வந்தவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த நாராயணன் (48), புருஷோத்தமன் (21), ஆறுமுகம் மகன் ரோகித் குமார் (20), திருவாரூர் மாவட்டம் திருக்குவனை சுந்தரபாண்டியன் தெருவை சேர்ந்த கருப்புசாமி மகன் கணபதி (57) ஆகியோர் என்பது தொியவந்தது. இதையடுத்து நாராயணன் உள்பட 4 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்த மதுபாட்டில்கள், மினிவேனை பறிமுதல் செய்தனர். 

Next Story