2 மாதங்களுக்கு கூடுதல் அரிசி


2 மாதங்களுக்கு கூடுதல் அரிசி
x
தினத்தந்தி 12 Jun 2021 2:56 PM GMT (Updated: 2021-06-12T20:26:09+05:30)

ரேஷன் கார்டுதாரர்களுக்கு 2 மாதங்களுக்கு கூடுதல் அரிசி வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம், 
ரேஷன் கார்டுதாரர்களுக்கு 2 மாதங்களுக்கு கூடுதல் அரிசி வழங்க உத்தரவிடப்பட்டு உள்ளது.
நுகர்வோர் பாதுகாப்பு
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள நிலையில் தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மூலமாக பிரதம மந்திரி கரிப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் அந்தியோதயா அன்ன யோஜனா மற்றும் முன்னுரிமை குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து பயனாளிகளுக்கும், பயனாளி ஒருவருக்கு 5 கிலோ வீதம் மே மற்றும் ஜூன் ஆகிய 2 மாத காலத்திற்கு கூடுதல் அரிசி விலையில்லாமல் வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதே போல தமிழ்நாடு அரசு முன்னுரிமையற்ற குடும்ப அட்டைகளுக்கும் பயனாளி ஒருவருக்கு 5 கிலோ வீதம் கூடுதல் அரிசி விலையில்லாமல் வழங்க ஆணையிடப் பட்டுள்ளது. 
பயன்பெறலாம்
மே, ஜூன் மாதங்களுக்கான இந்த கூடுதலாக வழங்கப்பட வேண்டிய அரிசியினை ஜூன், ஜூலை மாதங்களில் வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. குடும்ப அட்டைதாரர்கள் பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இந்த கூடுதல் அரிசியை சம்பந்தப்பட்ட நியாய விலைக்கடையில் பெற்று பயனடையலாம். 
பொதுமக்கள் நியாயவிலை கடைகளுக்கு பொருட்கள் வாங்க வரும் போது சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் போன்ற கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். மேற்கண்ட தகவலை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

Next Story