கொரடாச்சேரி ஒன்றியத்தில் மதகுகளுக்கு வர்ணம் பூசும் பணி


கொரடாச்சேரி ஒன்றியத்தில் மதகுகளுக்கு வர்ணம் பூசும் பணி
x
தினத்தந்தி 12 Jun 2021 9:57 PM IST (Updated: 12 Jun 2021 9:57 PM IST)
t-max-icont-min-icon

மேட்டூர் அணை தண்ணீரை வரவேற்கும் வகையில் கொரடாச்சேரி ஒன்றியத்தில் மதகுகளுக்கு வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது.

கொரடாச்சேரி:
மேட்டூர் அணை தண்ணீரை வரவேற்கும் வகையில் கொரடாச்சேரி ஒன்றியத்தில் மதகுகளுக்கு வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருகிறது. 
மேட்டூர் அணையில் தண்ணீர் திறப்பு 
காவிரி டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை தமிழக முதல்-மைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இந்த தண்ணீர் இன்னும் இரண்டு நாட்களில் கல்லணை வந்து சேரும். அதன் பின்பு கல்லணையிலிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய் உள்ளிட்ட ஆறுகள் மூலம் தண்ணீர் பிரிக்கப்பட்டு காவிரி டெல்டா மாவட்டங்களை சென்றடையும். 
மேட்டூர் அணையில் திறக்கப்பட்ட தண்ணீர் 10 நாட்களில் கடைமடை பகுதி வரை சென்றடையும். மேட்டூர் அணை திறக்கப்பட்டதையொட்டி காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர். திறக்கப்பட்ட தண்ணீர் தங்குதடையின்றி பாசன பகுதிகளுக்கு சென்று சேரும் வகையில் ஆறு, வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகிறது. 
வர்ணம் பூசும் பணி 
இந்த பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் நிறைவடைய இருக்கிறது. இந்தநிைலயில்  காவிரி பாசன பகுதிகளில் உள்ள ஆற்று மதகுகள், ரெகுலேட்டர், நீர் ஒழுங்கிகள் சுத்தம் செய்யப்பட்டும், பழுது நீக்கப்பட்டும், வர்ணம் பூசப்பட்டும் வருகிறது. மேட்டூர் அணை தண்ணீரை வரவேற்கும் வகையில் கொரடாச்சேரி ஒன்றியத்தில் கொரடாச்சேரி வெட்டாறு பாலம், வெண்ணவாசலில் பாண்டவையாற்றின் ரெகுலேட்டர், எண்கண் ரெகுலேட்டர் உள்ளிட்ட இடங்களில் வர்ணம் பூசும் பணி  நடைபெற்று வருகிறது. வர்ணம் பூசும் பணி நடைபெற்று வருவதால் ரெகுலேட்டர் மற்றும் மதகுகள் கண்ணைக்கவரும் வகையில் காணப்படுகிறது.

Next Story