கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் ஆய்வு


கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 12 Jun 2021 5:30 PM GMT (Updated: 12 Jun 2021 5:30 PM GMT)

ஆடையூர் ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் சந்தீப்நந்தூரி ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், சிறப்பு முகாம்களில் நடந்து வருகிறது. 

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10-ந்தேதி வரை, முதல் தவணையாக 1 லட்சத்து 32 ஆயிரத்து 325 பேருக்கும், 2-வது தவணையாக 31 ஆயிரத்து 577 பேருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை ஊராட்சி ஒன்றியம் ஆடையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுகாதாரத் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் நேற்று சிறப்பு கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. முகாமை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது தடுப்பூசி போட்டு கொண்டவர்களிடம் தங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் தெரிவித்து அவர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வலியுறுத்த வேண்டும், என்றார். 

ஆய்வின்போது சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர். வருவாய் கோட்ட அலுவலர் வெற்றிவேல், வட்டார மருத்துவ அலுவலர் புவனேஷ்வரி, திருவண்ணாமலை ஒன்றிய ஆணையாளர் சம்பத் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

 முகாமில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு தன்னார்வலர்கள் மூலம் மளிகைப் பொருட்கள் தொகுப்பு இலவசமாக வழங்கப்பட்டது.

Next Story