கொரோனா தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியது
தா.பழூர் வட்டாரத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி மீண்டும் தொடங்கியது.
தா.பழூர்:
கொரோனா பரவலை தடுக்க தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதில் முதலாவதாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. இதன்படி அரியலூர் மாவட்டம் தா.பழூர் பகுதியிலும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்தது. இந்நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக அந்த பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நேற்று காலை தா.பழூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மாவட்ட சுகாதாரத்துறையிடம் இருந்து கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்தன. இதையடுத்து பொதுமக்களுக்கு தடுப்பூசி போடும் பணி தா.பழூர் வட்டாரத்தில் மீண்டும் தொடங்கியது. நேற்று ஒரே நாளில் 502 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story