மாவட்ட செய்திகள்

கஞ்சா விற்ற பெண் கைது + "||" + Woman arrested for selling cannabis

கஞ்சா விற்ற பெண் கைது

கஞ்சா விற்ற பெண் கைது
கடமலைக்குண்டு பகுதியில் கஞ்சா விற்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
தேனி : 

தேனி மாவட்டத்தில்  கடமலைக்குண்டு போலீசார் நேற்று தங்கம்மாள்புரம் பகுதியில் ரோந்து சென்றனர். 

அப்போது தங்கம்மாள்புரம் மயானம் அருகே நின்று கஞ்சா விற்பனை செய்துகொண்டிருந்த அதே கிராமத்தை சேர்ந்த கலைச்செல்வன் மனைவி ஈஸ்வரியை (வயது 48) போலீசார் கைது செய்தனர். 

மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
இதேேபால் போடி முந்தல் சோதனை சாவடி அருகே சந்தேகப்படும்படி வந்த வாலிபரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். 

அவர் வைத்திருந்த குடையில் 100 கிராம் கஞ்சாவை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். 

விசாரணையில் அவர், போடி குப்பிநாயக்கன்பட்டியை சேர்ந்த லட்சுமணன் (26) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போடி குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கஞ்சா விற்ற 3 பேர் கைது
பணகுடி பகுதியில் கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
2. கஞ்சா விற்ற 8 பேர் கைது
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
3. கஞ்சா கொண்டு வந்து விற்ற வியாபாரி உள்பட 2 பேர் கைது
சென்னையில் இருந்து கஞ்சா கொண்டு வந்து விற்ற வியாபாரி உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. கஞ்சா விற்ற மேலும் 10 பேர் கைது
குமரி மாவட்டத்தில் கஞ்சா விற்ற மேலும் 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. கஞ்சா விற்ற 2 பேர் கைது
திண்டுக்கல் அருகே கஞ்சா விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.