பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை


பல்கலைக்கழக மாணவிக்கு பாலியல் தொல்லை
x
தினத்தந்தி 14 Jun 2021 12:35 AM IST (Updated: 14 Jun 2021 12:35 AM IST)
t-max-icont-min-icon

அவதூறு பரப்பி விடுவதாக மிரட்டி உடற்பயிற்சிக்கு வந்த பல்கலைக் கழக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.

வில்லியனூர், ஜூன்.14-
அவதூறு பரப்பி விடுவதாக மிரட்டி உடற்பயிற்சிக்கு வந்த  பல்கலைக் கழக மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முன்னாள் ராணுவ வீரர் கைது செய்யப்பட்டார்.
பாலியல் தொல்லை
சென்னையில்         பத்ம சேஷாத்திரி பள்ளியில் ஆன்லைன் வகுப்பில் மாணவிகளிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து   ஆசிரியர் ராஜகோபாலன் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டார்.
அதேபோல் சேத்துப்பட்டு மகரிஷி வித்யா மந்திர் பள்ளி ஆசிரியர் ஆனந்தன், சென்னை தடகள பயிற்சி மைய  பயிற்சியாளர்   நாக ராஜன் ஆகியோரும் பாலியல் தொந்தரவு புகாரில் அடுத்தடுத்து சிக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பெரும்       பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவங்களைபோல்,  புதுவையிலும்   பல்கலைக்கழக  மாணவிக்கு பாலியல்    தொல்லை கொடுத்த சம்பவம் நடந்துள்ளது. 
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறியதாவது:-
பல்கலைக்கழக மாணவி
 வில்லியனூர் பகுதியை சேர்ந்த 20 வயது மாணவி. காலாப்பட்டில் உள்ள மத்திய பல்கலைக்கழகத்தில்       எம்.எஸ்சி., முதலாம் ஆண்டு   படித்து வருகிறார்.
சிறு வயது முதல் போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என்று லட்சியம் கொண்டதால் தனது உடலை திடகாத்திரமாக வைத்திருக்க விரும்பினார். இதை அறிந்த அவரது பெற்றோர் வடமங்கலத்தில் உள்ள முன்னாள் ராணுவ வீரர் சிவக்குமார் (வயது 50)என்பவர் நடத்தி வரும் உடற்பயிற்சி மையத்தில் சேர்த்து விட்டனர்.
அங்கு சேர்ந்த சில நாட்  களிலேயே   அந்த  மாணவி  யிடம் சிவக்குமார் பாலியல் தொந்தரவு செய்ய ஆரம்பித்ததாக   கூறப்படுகிறது.  உடற் பயிற்சி அளிப்பதுபோல் பாலியல் தொல்லை கொடுத்தாராம். மாணவியின் உடலை வர்ணித்து ஆபாசமாக பேசியதாகவும் கூறப்படுகிறது.
செல்போனில் மிரட்டல்
இதனால்   மனரீதியாக பாதிக்கப்பட்ட   மாணவி நடந்த சம்பவம்    குறித்து பெற்றோரிடம் சொல்ல தயங்கி, தான் பயிற்சிக்கு செல்ல விரும்பவில்லை என்று   கூறி வந்தார். சம்பவத்தன்று மாணவியின் செல் போனில் தொடர்பு கொண்ட சிவக்குமார், ஆபாசமாக பேசி தனது ஆசைக்கு இணங்குமாறு அழைத்துள்ளார். இதற்கு சம்மதிக்காவிட்டால் அவதூறு பரப்பி விடுவதாகவும் மிரட்டியுள்ளார். இதுபற்றி    மாணவி    தனது பெற்றோரிடம் தெரிவித்தார். இதை கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
போலீசில் புகார்
உடனே     மாணவியின் பெற்றோர்  வில்லியனூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிவக்குமாரை கைது செய்தனர்.
உடற்பயிற்சி  கூடத்தில் இளைஞர்களுடன், 5-க்கும் மேற்பட்ட மாணவிகளும் பயிற்சி பெற்று வருகின்றனர். அவர்களுக்கும் இதுபோல் பாலியல் தொந்தரவு கொடுக்கப்பட்டதா? என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
உடற்பயிற்சிக்கு  வந்த மாணவியிடம்  முன்னாள் ராணுவ வீரர் பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் வில்லியனூரில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story