இன்று முதல் 4 நாட்களுக்கு மின்தடை


இன்று முதல் 4 நாட்களுக்கு மின்தடை
x
தினத்தந்தி 15 Jun 2021 11:36 PM IST (Updated: 15 Jun 2021 11:36 PM IST)
t-max-icont-min-icon

சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஒன்றியத்தில்இன்று முதல் 4 நாட்களுக்கு மின்தடை வினியோகி்க்கப்படுகிறது.

சிங்கம்புணரி,

சிங்கம்புணரி உட்கோட்டத்திற்குட்பட்ட சிங்கம்புணரி மற்றும் எஸ்.புதூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட துணை மின் நிலையத்தில் இருந்து செல்லும் உயர் அழுத்த மின் பாதை பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. பராமரிப்பு பணியின் போது கீழே காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை 2 மணி நேரம் மின் வினியோகம் இருக்காது. மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் விவரம் வருமாறு:-
இன்று(புதன்கிழமை) சிங்கம்புணரி தேத்தாங்காடு, பஸ் நிலையம், வடக்கு வேளார் தெரு மற்றும் அணைக்கரைப்பட்டி, கிருங்காக்கோட்டை, மேலப்பட்டி, பிரான்மலை, செல்லியம்பட்டி, வையாபுரிபட்டி, மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகள்.
17-ந்தேதி சிங்கம்புணரி காசிப்பிள்ளை நகர், அம்பேத்கர் நகர், சந்திவீரன் கூடம், கண்ணமங்கலபட்டி, அரசினம்பட்டி, குமரிபட்டி, நாட்டார்மங்கலம், சதுர்வேதமங்கலம், மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள்.
18-ந்தேதி எஸ்.புதூர் ஒன்றியத்தில் உள்ள எஸ்.புதூர் செம்மாம்பட்டி, உலகம்பட்டி, குரும்பலூர் வடகாடு, முசுண்டபட்டி, திருமலைக்குடி, வலசைபட்டி, சின்னாரம்பட்டி, கானப்பட்டி மற்றும் கருமிபட்டி அதனை சுற்றியுள்ள பகுதிகள்.
19-ந்தேதி மேலவண்ணாரிருப்பு, கிழவண்ணருப்பு, வெள்ளிக்குன்றம்பட்டி, மற்றும் கே.புதுப்பட்டி, கரிசல்பட்டி, சேர்வைகாரன்பட்டி, மாயாண்டிபட்டி, தர்மபட்டி, இடையபட்டி, கொண்டபாளையம், கோணம்பட்டி, கரியாம்பட்டி, செட்டிகுறிச்சி, குன்னத்தூர், புழுதிபட்டி, கணபதிபட்டி, சூரப்பட்டி, நாகமங்கலம்.
மேற்கண்ட பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 12 மணி வரை  மின் வினியோகம் நிறுத்தப்படுவதாக உதவி செயற்பொறியாளர் செல்லதுரை தெரிவித்து உள்ளார்.


Next Story