பெண்ணை தாக்கிய தம்பதி கைது


பெண்ணை தாக்கிய தம்பதி கைது
x
தினத்தந்தி 15 Jun 2021 8:59 PM GMT (Updated: 2021-06-16T02:29:41+05:30)

பெண்ணை தாக்கிய தம்பதியை போலீசார் கைது செய்தனர்.

உடையார்பாளையம்:
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே உள்ள வாணதிரையான்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவருடைய மனைவி வினோதா(வயது 36). கூலித்தொழிலாளியான இவருக்கும், அதே பகுதியில் வசிக்கும் சிதம்பர பாரதிதாசன் (41) என்பவருக்கும் இடையே இடப்பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் வினோதாவை, சிதம்பர பாரதிதாசன் மற்றும் அவரது மனைவி ஜெயப்பிரியா(34) ஆகியோர் சேர்ந்து தகாத வார்த்தையால் திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்து வினோதா உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மாசிலாமணி வழக்குப்பதிந்து சிதம்பர பாரதிதாசன், ஜெயப்பிரியா ஆகியோரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Related Tags :
Next Story