மதுவிற்ற 4 பேர் கைது
சாத்தூர் பகுதியில் மது விற்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சாத்தூர்,
சாத்தூர் டவுன் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையது இப்ராகிம் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது படந்தால் முனியசாமி கோவில் அருகில் வைத்து மதுபாட்டில் விற்ற சாத்தூரை சேர்ந்த சரவணன் (வயது 52) என்பவரிடம் 13 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டன. கிருஷ்ணன் கோவில் அருகில் வைத்து மதுபாட்டில் விற்ற சாத்தூரை சேர்ந்த போஸ்பாண்டி (51) என்பவரிடம் 9 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. குருலிங்காபுரம் அருகில் வைத்து மதுபாட்டில் விற்ற இறவார்பட்டியை சேர்ந்த ராஜேஷ்வரன் (20) என்பவரிடம் 43 மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டன. அதேபோல அப்பயநாயக்கன்பட்டி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிமுருகன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்ட போது திருவிருந்தான்பட்டி பெட்டிகடையில் வைத்து மதுபாட்டில் விற்ற தங்கபாண்டி (37) என்பவரிடம் 10 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 4 பேரையும் கைது செய்தனர்.
Related Tags :
Next Story