நெல்லையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
நெல்லையில் டாக்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
நெல்லை:
நெல்லை அரசு மருத்துவ கல்லூரியில் கொரோனா தடுப்பூசி மையத்திற்கு முன்பு இந்திய மருத்துவ சங்கத்தின் நெல்லை கிளையின் சார்பில் டாக்டர்கள் கோரிக்கை அட்டையுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். நெல்லை கிளை தலைவர் பிரான்சிஸ் ராய் தலைமை தாங்கினார். செயலாளர் ராஜா விக்னேஷ், பொருளாளர் முகமது இப்ராஹிம் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.
மருத்துவமனை மற்றும் மருத்துவத்துறை பணியாளர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு சட்டம் இயற்ற வேண்டும். ஒவ்வொரு மருத்துவமனைக்கும் நிலையான மற்றும் உறுதியான பாதுகாப்பு வேண்டும். மருத்துவமனையை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும். மருத்துவ பணியாளர் மீது தாக்குதல் நடத்தியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
Related Tags :
Next Story