வழிப்பறி செய்ததாக பொய் புகார் கொடுத்த பட்டதாரி வாலிபர் கைது

வழிப்பறி செய்ததாக பொய் புகார் கொடுத்த பட்டதாரி வாலிபர் கைது
வழிப்பறி செய்ததாக பொய் புகார் கொடுத்த பட்டதாரி வாலிபர் கைது
Published on

திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள அரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் மகன் ராமு(வயது 28). பி.எஸ்சி. பட்டதாரியான இவர் சம்பவத்தன்று சோழ பாண்டிபுரம் சென்ற போது அதேகிராமத்தைச் சேர்ந்த அருண்பாண்டியன், தமிழ்வாணன், சக்திவேல் ஆகிய 3 பேரும் தன்னை வழிமறித்து ரூ.15 ஆயிரம் மதிப்புள்ள செல்போன், ரூ.4,500 பணம் ஆகியவற்றை பறித்து சென்றதாக திருக்கோவிலூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தினார். விசாரணையின் முடிவில் ராமு கொடுத்த புகார் பொய் என்பது தெரியவந்ததை அடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com