தேனி அருகே ஆட்டோ மீது மரம் விழுந்து 4 பேர் படுகாயம்


தேனி அருகே ஆட்டோ மீது மரம் விழுந்து 4 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 21 Jun 2021 8:48 PM IST (Updated: 21 Jun 2021 8:49 PM IST)
t-max-icont-min-icon

தேனி அருகே ஆட்டோ மீது மரம் விழுந்து 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

தேனி:
தேனி அருகே உள்ள கொடுவிலார்பட்டியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது 29). ஆட்டோ டிரைவர். நேற்று இவர் கொடுவிலார்பட்டியில் இருந்து நாகலாபுரம் நோக்கி ஆட்டோவில் சென்று கொண்டு இருந்தார். அந்த ஆட்டோவில் அதே ஊரைச் சேர்ந்த சாந்தி (42), வீரம்மாள் (45), கலையரசி (31) ஆகியோர் பயணம் செய்தனர். சிவலிங்கநாயக்கன்பட்டி விலக்கு அருகில் சென்ற போது சாலையோரம் இருந்த ஒரு மரம் வேரோடு சாய்ந்து ஆட்டோ மீது விழுந்தது. இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. இதைத்தொடர்ந்து பாலகிருஷ்ணன், சாந்தி, வீரம்மாள், கலையரசி ஆகிய 4 பேரும் படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்துக்கு பழனிசெட்டிபட்டி போலீசார் விரைந்து வந்து, பொதுமக்கள் உதவியுடன் சாலையில் கிடந்த மரத்தை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

Next Story