விவசாயியை வெட்டியவர் கைது


விவசாயியை வெட்டியவர் கைது
x
தினத்தந்தி 21 Jun 2021 5:22 PM GMT (Updated: 2021-06-21T22:52:41+05:30)

விவசாயியை வெட்டியவர் கைது

கீரமங்கலம், ஜூன்.22-
கீரமங்கலம் அருகே உள்ள சேந்தன்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பாரி (வயது 45). விவசாயியான இவர் தனது தோட்டத்தில் வரப்பு ஓரத்தில் பலா மரக்கன்று நட்ட போது, பக்கத்து தோட்டத்தைச் சேர்ந்த குமார் (48) என்பவர் நடக் கூடாது என்று கூறியதால் இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த குமார்  மண்வெட்டியால் பாரி தலையில் வெட்டினாராம். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அறந்தாங்கி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இது குறித்த புகாரின் பேரில் கீரமங்கலம் போலீசார்  வழக்குப்பதிவு செய்து குமாரை கைது செய்தனர்.

Next Story