மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல்


மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல்
x
தினத்தந்தி 21 Jun 2021 8:30 PM GMT (Updated: 2021-06-22T02:00:14+05:30)

கடையம் அருகே மண் அள்ள பயன்படுத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.

கடையம்:
கடையம் அருகே ஆழ்வார்குறிச்சி போலீசார் நேற்று மாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடையம் அருகே ஏ.பி.நாடானூரைச் சேர்ந்த விவசாயி செல்வகுமார் (வயது 40) தனது டிராக்டரில் தோட்டத்துக்கு, உரிய அனுமதியின்றி மண் அள்ளிக் கொண்டு சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்தனர். மேலும் செல்வகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Next Story