தமிழக அரசுக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்


தமிழக அரசுக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்
x
தினத்தந்தி 23 Jun 2021 1:55 PM GMT (Updated: 2021-06-23T19:25:25+05:30)

மதுரை சிறப்பு கூட்டுக்குடிநீர் திட்டத்தை கைவிடக்கோரி தமிழக அரசுக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடந்தது.

கூடலூர்:

தேனி மாவட்டம் லோயர்கேம்பில் இருந்து, மதுரைக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் சிறப்பு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

 இந்த திட்டத்தை கைவிடக்கோரியும், அதற்கு பதிலாக மாற்று திட்டத்தை அறிவிக்க வலியுறுத்தியும் தமிழக அரசுக்கு அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் கூடலூரில் நடந்தது. 

கூடலூர் முல்லைச்சாரல் விவசாயிகள் சங்கம், கூடலூர் அனைத்து சமுதாய பொதுமக்கள், முல்லைப்பெரியாறு தேனி மாவட்ட பாசனம் மற்றும் குடிநீர் பாதுகாப்பு சங்கம் சார்பில் அஞ்சல் அட்டைகள் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Next Story