மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிப்பு
மின்நிறுத்தம் செய்யப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெரம்பலூர்:
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சிறுவாச்சூர் உதவி செயற்பொறியாளர் ரவிக்குமார் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
புதுக்குறிச்சி துணை மின் நிலையத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 28-ந் தேதி வரை அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. எனவே இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் தெரணி, தெரணிபாளையம், நல்லூர் ஆகிய பகுதிகளில் இன்றும், நாளை மறுநாளும் (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் இருக்காது. இதே போல் இரூர், ஆலத்தூர், ஆலத்தூர் கேட் ஆகிய பகுதிகளில் நாளையும் (சனிக்கிழமை), 28-ந்தேதியும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரம் இருக்காது. இவ்வாறு அவர், அதில் கூறியுள்ளார்.
இதேபோல் குன்னம் உப கோட்டத்திற்கு உட்பட்ட நன்னை, தேனூர் மற்றும் கூத்தூர் ஆகிய துணை மின் நிலையங்களில் இருந்து மின்னோட்டம் பெறப்படும் பரவாய், சின்னப்பரவாய், வைத்தியநாதபுரம், புதுவேட்டக்குடி, நல்லறிக்கை, துங்கபுரம், கோவில்பாளையம், மருதையன் கோவில் ஆகிய கிராம பகுதிகளில் இன்று(வெள்ளிக்கிழமை) அவசரகால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே இன்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை அப்பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story