பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
கரூர்
கரூர் மாவட்டத்தில் 1430-ம் ஆண்டு பசலிக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கடந்த 25, 28 மற்றும் 29,30-ந்் தேதிகளில் கரூர் தாலுகா அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் கரூர் தாலுகாவிற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களிடம் இருந்து இணையதளம் வாயிலாக 79 மனுக்கள் பெறப்பட்டு பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்பட்டு 18 மனுக்களுக்கு தீர்வு காண்பட்டது. இதில் 8 பேருக்கு பட்டா மாறுதலுக்கான ஆணையும், 10 பேருக்கு முதியோர் ஓய்வூதியத்திற்கான ஆணையும் வழங்கப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் மீது பரிசீலனை நடைபெற்று வருகிறது. கரூர் வருவாய் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நல திட்ட உதவிகளை வழங்கினார். இதில் கரூர் தாசில்தார் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story