திருவாரூர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம்


திருவாரூர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 1 July 2021 4:24 PM GMT (Updated: 1 July 2021 4:24 PM GMT)

திருவாரூர் மாவட்டத்தில் பெட்ரோல், டீசல் விைல உயர்வை கண்டித்து கம்யூனிஸ்டு கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ேமாட்டார்சைக்கிள்களுக்கு மாைல அணிவிக்கப்பட்டது.

திருவாரூர், 

பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை உயர்வினை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வினை கட்டுப்படுத்திட வேண்டும். கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையை தவிர்த்திட அனைவருக்கும் தடுப்பூசி போடுவதை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்ேவறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தனர்.

அதன்படி நேற்று திருவாரூர் தலைமை தபால் நிலையம் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சிவபுண்ணியம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் வடிவழகன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பழனிவேல், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் மாசிலாமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிர்வாகிகள் பூபாலன், மாதவன், நெப்போலியன் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

கொரடாச்சேரி பேரூராட்சி அலுவலகம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவற்றின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் ஜோசப் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கந்தசாமி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய பொறுப்பாளர் சுந்தரபாண்டியன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் கேசவராஜ் மற்றும் பலர் கொண்டனர்.

இதேபோல் திருத்துறைப்பூண்டியில் காமராஜர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாரிமுத்து எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில குழு உறுப்பினர் நாகராஜன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன், திருத்துறைப்பூண்டி ஒன்றிய தலைவர் பாஸ்கர் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர்கள் காரல்மார்க்ஸ், கதிரேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

கோட்டூரில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாரிமுத்து எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். இதில் ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை முருகேசன், இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சண்முகவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சிகளின் விவசாய அணி அமைப்பாளர் முருகையன் உள்பட பலர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் மோட்டார்சைக்கிள், ஆட்டோக்களுக்கு மாலை அணிவிக்கப்பட்டு கயிறு மூலம் இழுத்துவரப்பட்டது.

குடவாசல் வி.பி.சிந்தன் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் லட்சுமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் சுப்ரவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சிறைச்செல்வன் ஆகியோர் தலைமை தாங்கினர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் முருகேசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியன் ஆகியோர் பேசினர். முடிவில் மாற்றுத்திறனாளி சங்க மாவட்ட செயலாளர் கெரக்கொரியா நன்றி கூறினார்.

நன்னிலம் பஸ் நிலையம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் உலகநாதன், இந்திய கம்யூனிஸடு கட்சி ஒன்றிய செயலாளர் அல்போன்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதேபோல் பேரளம் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் தீனகவுதமன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட ஊராட்சி உறுப்பினர் உதுமான், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலளார் சேதுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

வலங்கைமான் கடைத்தெருவில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் செந்தில்குமார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய செயலாளர் சுப்ரமணியன், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளர் ராதா மற்றும் பலர் கலந்துகொண்டு கோஷங்கள் எழுப்பினர்.

நீடாமங்கலத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் தமிழார்வன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட குழு உறுப்பினர் கைலாசம், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் புதியவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்தும், மத்திய அரசை கண்டித்தும் கோஷங்களைஎழுப்பினர்.

பெட்ரோல் - டீசல் விலை உயர்வை கண்டித்து மன்னார்குடியில் தனியார் பெட்ரோல் நிலையம் முன்பு மோட்டார் சைக்கிள்களுக்கு மாலை அணிவித்து நூதனமுறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்

இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர்கள் செங்குட்டுவன், ஜெயக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். மன்னார்குடி தலைமை தபால் நிலையம் முன்பு கியாஸ் சிலிண்டருக்கு பாடைக்கட்டி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பபாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளர் கலைச்செல்வன் தலைமை தாங்கினார். இதில் மார்க்சிஸ்ட் கட்சி நகர செயலாளர் ரகுபதி மற்றும் பலர் கலந்துகொண்டு கோஷமிட்டனர்.

முத்துப்பேட்டை பேரூராட்சி அருகே இந்திய கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முருகையன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட பொருளாளர் வெற்றி ஆகியோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கம்யூனிஸ்டு சார்பில் நகர செயலாளர் மார்க்ஸ், முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவர் தெட்சிணாமூர்த்தி, மார்க்சிஸ்ட் சார்பில் நகர செயலாளர் செல்லத்துரை உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story