‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் கி.வீரமணி தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்


‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் கி.வீரமணி தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 2 July 2021 5:13 PM IST (Updated: 2 July 2021 5:13 PM IST)
t-max-icont-min-icon

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு அளிக்க வேண்டும் கி.வீரமணி தலைமையில் நடந்த அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்.

சென்னை,

நீட் தேர்வு விவகாரத்தில் அடுத்தக்கட்ட நிலைப்பாடு குறித்து சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி தலைமையில் அவசர அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டம் நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினராக ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன் கலந்து கொண்டார்.

இதில் தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, ஊடகப்பிரிவு தலைவர் கோபண்ணா, ம.தி.மு.க. துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத்தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு, இந்திய கம்யூனிஸ்டு கட்சி துணை செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ், தமிழக வாழ்வுரிமை கட்சி துணை பொதுச்செயலாளர் சத்ரியன் வேணுகோபால், திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப.வீரபாண்டியன், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, பேராயர் எஸ்றா சற்குணம் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் தமிழகத்துக்கு ‘நீட்’ தேர்வில் இருந்து ஓராண்டு விலக்கு அளித்ததை முன்னுதாரணமாக கொண்டு, தமிழகத்துக்கு நீட் தேர்வில் நிரந்தரமாக விலக்களிக்கும் வகையில் முடிவெடுத்து பிரதமர் அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Next Story