தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்


தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று  கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள்
x
தினத்தந்தி 2 July 2021 3:35 PM GMT (Updated: 2 July 2021 3:35 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கொரோனா வைரஸ்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடமாடும் மாதிரி சேகரிப்பு வாகனம் மூலம் கொரோனா தொற்று மாதிரிகளும் சேகரிக்கப்படுகிறது. மேலும் கொரோனா பாதிப்பு கண்டறியும் பகுதிகளில் சிறப்பு காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. 
தடுப்பூசி முகாம்
அதே போன்று கொரோனா தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகின்றன.
தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை வ.உ.சி. நகர், கருங்குளம் ஒன்றியம் புதுக்குளம், அரசர்குளம், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியம் புல்லாவழி, உடன்குடி ஒன்றியம் மெஞ்ஞானபுரம், திருச்செந்தூர் ஒன்றியம் என்.முத்தையாபுரம், ஆழ்வார்திருநகரி ஒன்றியம் புறையூர், சாத்தான்குளம் ஒன்றியம் பொத்தகாலன்விளை, கோவில்பட்டி ஒன்றியம் வாலம்பட்டி, மேல ஈரால், ஓட்டபிடாரம் ஒன்றியம் வடக்கு ஆரைக்குளம், தெற்கு ஆரைக்குளம், கயத்தாறு ஒன்றியம் கிரு
ணன் புதூர், பரசுராம புதூர், புதுப்பட்டி, வேப்பன்குளம், விளாத்திகுளம் ஒன்றியம் அயன்பொம்மையாபுரம், பனையடிபட்டி மற்றும் சாலமோன் நகர், கரிசல்குளம், ஆத்தங்கரை, சொக்கலிங்கபுரம், தொப்பம்பட்டி, ஓ. துரைச்சாமிபுரம், கந்தசாமிபுரம், அ.குமாரபுரம், குருவார்பட்டி, கருத்தையாபுரம், மகாராஜபுரம், கோடாங்கிப்பட்டி, புதூர் ஒன்றியம் பூதலாபுரம், சின்னையாபுரம், வாதலக்கரை, பி.வெங்கடேஸ்வரபுரம் ஆகிய பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் நடைபெறுகிறது.
ஒத்துழைப்பு
எனவே பொதுமக்கள் அனைவரும் முகாம்களில் கலந்து கொண்டு தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் கொரோனா தொற்று தொடர்பாக மக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையை 1077 கட்டணமில்லா தொலைபேசி எண் மூலமும், 0461-2340101 மற்றும் 9486454714 ஆகிய தொலைபேசி எண்களிலும் 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Next Story