மாவட்ட செய்திகள்

வாரிசுதாரர்கள் 7 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை + "||" + Appointment order on compassionate grounds for 7 heirs

வாரிசுதாரர்கள் 7 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை

வாரிசுதாரர்கள் 7 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணை
வருவாய்த்துறையில் பணியின்போது இறந்த அலுவலர்-பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 7 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.
திருவாரூர்:
வருவாய்த்துறையில் பணியின்போது இறந்த அலுவலர்-பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 7 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.
வாரிசுதாரர்கள் 
திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய்த்துறையில் பணியின்போது இறந்த அலுவலர் மற்றும் பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 7 பேருக்கு  கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வழங்கினார்.
அதன்படி ஆலத்தூர் கிராம உதவியாளராக பணிபுரிந்து பணியின்போது இறந்த ஜெய்கதிரவன் மனைவி சத்யாவுக்கு குடவாசல் வட்டத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராகவும், நன்னிலம் தனி தாசில்தார் (சமூக பாதுகாப்பு திட்டம்) ஆக பணிபுரிந்து பணியின் போது இறந்த உமாதேவி மகன் விமல்நாத் ராவ் என்பவருக்கு வலங்கைமான் வட்டத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராகவும், கூத்தாநல்லூர் தாசில்தார் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து பணியின்போது இறந்த மல்லிகா மகள் இளமதிக்கு  திருவாரூர் வட்டத்தில் இளநிலை வருவாய் ஆய்வாளராகவும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
பணி நியமன ஆணை
மேலும் பனங்காட்டான்குடியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து பணியின் போது இறந்த அண்ணாமலை மகள் சண்முகபிரியாவுக்கு நன்னிலம் மருதவாஞ்சேரியில் கிராம நிர்வாக அலுவலராகவும், தலையூர் கிராம உதவியாளராக பணிபுரிந்து பணியின்போது இறந்த முருகேசன் மகன் அய்யப்பனுக்கு  நன்னிலம் சொரக்குடி கிராம நிர்வாக அலுவலராகவும், வலங்கைமான் தாசில்தார் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து பணியின்போது இறந்த ராமலிங்கம் மகன் விஜயகுமாருக்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகவும், வடகண்டம் கிராமத்தில் கிராம உதவியாளராக  பணிபுரிந்து பணியின்போது இறந்த ராஜகோபாலன் மகன் சத்தியராஜ் என்பவருக்கு திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராகவும்  பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இதில் மாவட்ட வருவாய் அலுவலர் பொன்னம்மாள், மாவட்ட கலெக்டரின்  நேர்முக உதவியாளர் (பொது) புண்ணியகோட்டி, மாவட்ட வழங்கல் அலுவலர் கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.