மாவட்ட செய்திகள்

செல்போன் திருடியவர் கைது + "||" + Cell phone thief arrested

செல்போன் திருடியவர் கைது

செல்போன் திருடியவர் கைது
செல்போன் திருடியவர் கைது செய்யப்பட்டார்.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அர்ச்சுணன்(வயது 44). இவர் தனது செல்போன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தொலைந்து விட்டதாக ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரித்து வந்தனர். இந்த நிலையில் ஜெயங்கொண்டத்தில் பஸ் நிறுத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் செல்போனில் பேசியபடி வந்த ஒருவரை, போலீசார் நிறுத்தி சோதனை செய்தனர். மேலும் அவரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். இதையடுத்து போலீசார், அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தியதில், அவர் மேலகோவிந்தபுத்தூர் கிராமம் நடுத்தெருவைச் சேர்ந்த மணிகண்டன்(45) என்பதும், ெசல்போன் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப் பதிந்து, அவரை கைது செய்து அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை- பணம் திருட்டு
வேப்பந்தட்டை அருகே வீட்டின் பின்பக்க கதவை உடைத்து நகை- பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. டாஸ்மாக் கடையை உடைத்து 911 மதுபாட்டில்கள் திருட்டு
மதுரை அருகே டாஸ்மாக் கடையின் கதவை உடைத்து ரூ.1 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பிலான 911 மதுபாட்டில்களை திருடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
3. பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் வீட்டில் நகை-பணம் திருட்டு
பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியர் வீட்டில் நகை-பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.
4. பூட்டிய வீட்டில் 5 பவுன் நகைகள்-ரூ.1 லட்சம் திருட்டு
புதுக்கோட்டையில் பூட்டிய வீட்டில் 5 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சத்தை மர்மநபர்கள் திருடிச்சென்றது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
5. 7 ஆடுகள் திருட்டு
7 ஆடுகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.