மாவட்ட செய்திகள்

மான் கொம்பு பதுக்கிய டிரைவர் கைது + "||" + Deer horn driver arrested

மான் கொம்பு பதுக்கிய டிரைவர் கைது

மான் கொம்பு பதுக்கிய டிரைவர் கைது
சிவகிரியில் மான் கொம்பு பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.
சிவகிரி:
சிவகிரி அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் வென்னி மகன் அர்ஜூன் (வயது 31). டிரைவர். இவர் 3 ஆண்டுகளுக்கு முன்பு சிவகிரிக்கு மேற்கே வழில் வழி கண்மாய்க்கு கூலி வேலைக்கு சென்றபோது மான் கொம்பு கிடந்ததாகவும், அதனை எடுத்து வந்து தனது வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாகவும் சிவகிரி வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
உடனே சிவகிரி வனச்சரகர் சுரேஷ் தலைமையில், வடக்குப்பிரிவு வனவர் மகேந்திரன், தெற்குப்பிரிவு வனவர் அஜித்குமார், வனக்காப்பாளர்கள் திருவேட்டை, ராஜீ, சுதாகர், இமானுவேல், பாரதிகண்ணன், வனக்காவலர் அருண்குமார், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆனந்தன், சரவணன், மாரியப்பன், பாலசுப்பிரமணியன், சிவகிரி கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன் ஆகியோர் அர்ஜூன் வீட்டிற்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அதில் அங்கு மான் கொம்பு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அதை வனத்துறையினர் கைப்பற்றினர். தொடர்ந்து வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து அர்ஜூனை கைது செய்தனர். பின்னர் மாவட்ட வன அலுவலர் கவுதம் உத்தரவின் பேரில், அர்ஜூனுக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. இளம்பெண் பாலியல் பலாத்காரம்; டிரைவர் கைது
ஆம்பூர் அருகே இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
2. திருக்கோவிலூர் அருகே ஆட்டோவில் மதுபாட்டில் கடத்திய டிரைவர் கைது
திருக்கோவிலூர் அருகே ஆட்டோவில் மதுபாட்டில் கடத்திய டிரைவர் கைது