புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு பரிசு பொருட்கள்
பெரும்பாறை அருகே அரசு பள்ளியில் புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு பரிசு பொருட்களை ஆசிரியர்கள் வழங்கினர்.
திண்டுக்கல் :
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா பெரும்பாறை அருகே வெள்ளரிக்கரை மலைக்கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது.
தனியார் பள்ளியில் படித்த மாணவர்கள் அங்கிருந்து விலகி ஆர்வத்துடன் இப்பள்ளியில் சேர்ந்து வருகின்றனர்.
இதையடுத்து புதிதாக சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளியின் சார்பில் கவுரவிக்கப்பட்டனர்.
இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை கிருஷ்ணவேணி தலைமை தாங்கினார்.
இதில் நெல்லூர் அரசு கள்ளர் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர் கருப்பையா, மணலூர் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு புதிதாக சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு பொருட்கள், கல்வி உபகரணங்கள், கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சி அட்டவணை, பாடபுத்தகங்கள் ஆகியவற்றை இலவசமாக வழங்கினர்.
மேலும் மாணவர்களின் பெற்றோரும் கவுரவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story