அம்முண்டியில் 57 மில்லி மீட்டர் மழை பெய்தது; விவசாயிகள் மகிழ்ச்சி
அம்முண்டியில் 57 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூர்
வெப்பசலனம் காரணமாக வேலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
இதேபோன்று காட்பாடி, அணைக்கட்டு, குடியாத்தம், பொன்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல மணி நேரம் மழை கொட்டி தீர்த்தது. வேலூரில் பகலில் 100 டிகிரிக்கும் மேல் வெயில் வாட்டி வதைத்த நிலையில் இரவில் பெய்த பலத்த மழையின் காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவியது.
வேலூரில் பெய்த மழையினால் மாங்காய் மண்டி அருகே தற்காலிக காய்கறி மார்க்கெட்டில் மழைநீர் குளம் தேங்கி நின்றது. இதனால் வியாபாரிகள் அவதி அடைந்தனர்.
வேலூர் மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்ட பணிகள் நடந்து வருகிறது. இதனால் தெருக்கள் சேறும் சகதியுமாக காட்சி அளித்தன.
இதேபோன்று கோட்டை நுழைவுவாயில் பகுதியில் குளம் போன்று மழைநீர் தேங்கியது. மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அம்முண்டியில் அதிகபட்சமாக 57 மில்லி மீட்டர் மழை பெய்தது.
மற்ற பகுதிகளில் பெய்த மழை மில்லி மீட்டரில் வருமாறு:- பொன்னை- 49.2, காட்பாடி- 40.6, வேலூர்- 38.4, மேல்ஆலத்தூர்- 33.2, குடியாத்தம்- 25.4,
Related Tags :
Next Story