கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பாடபுத்தகம் வினியோகம்
கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு பாடபுத்தகம் வினியோகம் செய்யப்பட்டது.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவில் கோவை-பொள்ளாச்சி சாலையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி பேரூர் கல்வி மாவட்டம் பகுதியில் உள்ளது. இங்கு ஆயிரத்து 282 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-1 வகுப்பு வரை மாணவர் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இதுவரை கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப்பள்ளியில் 6-ம் வகுப்பில் 32 பேரும், பிளஸ்-1 வகுப்பில் சேர 170 பேரும் விண்ணப்பித்துள்ளனர். பள்ளியில் புதிதாக சேரும் மாணவ-மாணவிகளுக்கு உடனடியாக பாட புத்தகங்கள் வழங்கப்படுகிறது.
இதனை பள்ளி தலைமை ஆசிரியர் கிருஷ்ணமூர்த்தி, உதவி தலைமை ஆசிரியர் பழனிச்சாமி ஆகியோர் வழங்கி வருகின்றனர். மேலும் நாளை (திங்கட்கிழமை) முதல் 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் வழங்கப்படுகிறது.
மேலும் ஆன்லைனில் விண்ணப்பித்த பிளஸ்-1 வகுப்பு மாணவர்களுக்கு சேர்க்கை நடைபெற உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story