13 ஆடுகள் திருட்டு


13 ஆடுகள் திருட்டு
x
தினத்தந்தி 3 July 2021 11:36 PM IST (Updated: 3 July 2021 11:36 PM IST)
t-max-icont-min-icon

13 ஆடுகள் திருடப்பட்டன

கமுதி, 
கமுதி அருகே அன்னபூநாயக்கன்பட்டியில் செல்லத்துரை (வயது50) என்பவர் ஆடுகள் வளர்த்து, விற்கும் தொழில் செய்து வருகிறார். இவர் 300-க்கும் மேற்பட்ட ஆடுகளை வளர்த்து வருகிறார்.ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று விட்டு, வீட்டின் பின்புறம் உள்ள அவரது இடத்தில் அடைத்து வைத்துள்ளார். இந்தநிலையில் காலையில் பார்த்தபோது அதில் 13 ஆடுகள் திருடுபோனது தெரியவந்துள்ளது. இதுகுறித்து பெருநாழி போலீஸ் நிலையத்தில் செல்லத்துரை அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Next Story