மரக்கடையில் தீ விபத்து
பாளையங்கோட்டையில் மரக்கடையில் தீ விபத்து ஏற்பட்டது.
நெல்லை:
நெல்லை மேலப்பாளையத்தை சேர்ந்தவர் அபுதாகீர் (வயது 46). இவர் பாளையங்கோட்டை- சீவலப்பேரி ரோட்டில் மரக்கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு இவரது கடை அருகே கொட்டப்பட்டிருந்த குப்பையில் எரிந்த தீ, கடையில் குவித்து வைக்கப்பட்டிருந்த மரச்சாமான்கள், பழைய மரப்பொருட்கள் மீதும் பரவியது. இதனால் தீ மளமளவென்று பற்றி எரிந்தது. தகவல் அறிந்ததும் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். இதில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது. மேலும் அந்த வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு சில மோட்டார் சைக்கிளும் தீக்கிரையானது. இச்சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story