மாவட்ட செய்திகள்

விபத்தில் மினி லாரி டிரைவர் சாவு + "||" + Mini truck driver killed in crash

விபத்தில் மினி லாரி டிரைவர் சாவு

விபத்தில் மினி லாரி டிரைவர் சாவு
செங்கோட்டை அருகே விபத்தில் மினி லாரி டிரைவர் இறந்தார்.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள பிரானூர் வாய்க்கால் பாலம் பகுதியைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 44). இவர் கேரளாவில் இருந்து மினி லாரியில் பொருட்களை இறக்கிவிட்டு நேற்று அதிகாலையில் செங்கோட்டை நோக்கி வந்து கொண்டு இருந்தார்.
அப்போது, செங்கோட்டை அருகே உள்ள கட்டளை குடியிருப்பு மெயின் ரோட்டில் உள்ள வளைவில் தடுப்பு சுவரில் மினிலாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த முத்துப்பாண்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த புளியரை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். முத்துப்பாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.