மாவட்ட செய்திகள்

மறைமலைநகர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 பேர் பலி + "||" + Two killed in truck-motorcycle collision near Maraimalai Nagar

மறைமலைநகர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 பேர் பலி

மறைமலைநகர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 பேர் பலி
மறைமலைநகர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 பேர் பலியானார்கள்.
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அருகே உள்ள நெய்குப்பி கிராமத்தை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 27). இவரது நண்பர் செங்கல்பட்டு அடுத்த வல்லம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் (32).

இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் செங்கல்பட்டு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். மறைமலைநகர் அருகே செல்லும் போது பின்னால் வந்த லாரி கண்ணிமைக்கும் நேரத்தில் மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் பலத்த காயம் அடைந்த பார்த்திபன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். காயம் அடைந்த கார்த்திக்கை அக்கம்பக்கத்தினர் மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கார்த்திக் பரிதாபமாக இறந்தார்.

இந்த விபத்து குறித்து மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.