குரோம்பேட்டை சுரங்கப்பாதை பணிகள் வரும் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும்
குரோம்பேட்டை சுரங்கப்பாதை பணிகள் வரும் மார்ச் மாதத்துக்குள் முடிக்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த குரோம்பேட்டை ராதாநகர் ரெயில்வே கேட் பகுதியில் பொதுமக்களின் வசதிக்காக இலகு ரக வாகன சுரங்கப்பாதை கட்டும் பணி நடந்து வருகிறது. 10 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இத்திட்டம் முடியாததால் பொதுமக்கள் பெரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் இந்த இலகு ரக வாகன சுரங்கப்பாதை, ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டு உள்ளதாக தகவல் பரவியது. இதற்கு குரோம்பேட்டை, பல்லாவரம் பகுதிகளை சேர்ந்த சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து பல்லாவரம் எம்.எல்.ஏ. கருணாநிதி தலைமையில், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இந்த சுரங்கப்பாதை பணிகளை ஆய்வு செய்தனர். அப்போது பணியை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரும்படி அதிகாரிகளிடம் எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.
அதேநேரத்தில் பணிகளை ஆய்வு செய்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், ஒரு வழி சுரங்கப்பாதை என்ற தகவல் உண்மை இல்லை. இந்த சுரங்கப்பாதை இருவழி பாதையாக வருகிற மார்ச் மாதத்துக்குள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றனர்.
Related Tags :
Next Story