வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது 6 பேர் உயிர் தப்பினர்
வேடசந்தூர் அருகே கொட்டித்தீர்த்த கனமழையில் வீ்ட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் 6 பேர் உயிர் தப்பினர்.
வேடசந்தூர்:
வேடசந்தூர் அருகே உள்ள மேல்மாத்தினிபட்டி ஆதிதிராவிடர் காலனியில் வசித்து வருபவர் பஞ்சவர்ணம் (வயது 35). நேற்று முன்தினம் இரவு வீட்டில் பஞ்சவர்ணம், அவருடைய மகள்கள் சுபஸ்ரீ (8), சரவணப்பிரியா (6), முருகேஷ்வரி (3) மற்றும் அக்காள் செல்வி (37), அவருடைய கணவர் குமார் (40) ஆகியோர் தூங்கி கொண்டிருந்தனர்.
அப்போது நள்ளிரவு 11 மணிக்கு கனமழை கொட்டித்தீர்த்தது. இதில் வீட்டின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. எனினும் அதிர்ஷ்டவசமாக வீட்டில் படுத்திருந்த 6 பேரும் எவ்வித காயமும் இன்றி உயிர்தப்பினர். இது குறித்து தகவல் அறிந்த வேடசந்தூர் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
மேல்மாத்தினிபட்டி ஆதிதிராவிடர் காலனியில், கடந்த 30 வருடங்களுக்கு முன்பு தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டன. இதில் பெரும்பாலான வீடுகளின் மேற்கூரை சேதமடைந்துள்ளன. எனவே இந்த தொகுப்பு வீடுகளை சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story