பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை: லேப்டெக்னீசியன் போக்சோ சட்டத்தில் கைது


பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை:  லேப்டெக்னீசியன் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 5 July 2021 9:21 PM IST (Updated: 5 July 2021 9:21 PM IST)
t-max-icont-min-icon

பிளஸ்-2 மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த லேப்டெக்னீசியன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

பென்னாகரம்:
தர்மபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் தர்மபுரி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். பாலவாடியை சேர்ந்தவர் அருண்குமார். இவருடைய மகன் விக்னேஷ் (வயது 21). லேப் டெக்னீசியன். இவர், அந்த பிளஸ்-2 மாணவியை தன்னை காதலிக்குமாறு கூறி, பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதையறிந்த மாணவியின் தாயார் பென்னாகரம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக விக்னேஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தார். இதையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Next Story