முககவசம் அணியாமல் வந்த 30 பேருக்கு அபராதம்


முககவசம் அணியாமல் வந்த 30 பேருக்கு அபராதம்
x
தினத்தந்தி 6 July 2021 10:55 PM IST (Updated: 6 July 2021 10:55 PM IST)
t-max-icont-min-icon

திருக்கோவிலூரில் முககவசம் அணியாமல் வந்த 30 பேருக்கு அபராதம்

திருக்கோவிலூர்

திருக்கோவிலூரில் சுகாதார ஆய்வாளர்கள் சங்கரன், வெங்கடேஷ், பூபதி, கோபி, விக்னேஷ் மற்றும் ஏட்டு ராஜ்குமார், போலீஸ்காரர்கள் விக்னேஷ், விமலரசன் ஆகியோரை கொண்ட குழுவினர் பஸ்நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது முககவசம் அணியாமல் வந்த 30 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து ரூ.6 ஆயிரம் வசூல் செய்தனர். இந்த நடவடிக்கை தொடரும் எனவும் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முககவசம் அணிந்து வர வேண்டும். சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story